3 ஆண்டுகளில் குஜராத்தில் 25,478 தற்கொலைகள்: கார்கே

by Staff / 02-03-2024 12:51:54pm
3 ஆண்டுகளில் குஜராத்தில் 25,478 தற்கொலைகள்: கார்கே

பாஜக ஆளும் குஜராத்தில் தற்கொலை விகிதம் அதிகமாக இருப்பது கவலை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். குஜராத் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விமர்சித்துள்ளார். மூன்று ஆண்டுகளில் 25,478 பேர் தற்கொலை செய்து கொண்டதாக சட்டசபையில் அரசு கொடுத்த அறிக்கை காட்டுகிறது. இவர்களில் 500 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “தனது சொந்த மாநிலத்தில் நடந்த மனித அவலங்கள் குறித்து பிரதமர் மௌனம் காப்பது சரியல்ல" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via