கார் மீது லாரி மோதி பயங்கர சாலை விபத்து - 7 பேர் பலி

by Staff / 10-03-2024 01:12:42pm
கார் மீது லாரி மோதி  பயங்கர சாலை விபத்து - 7 பேர் பலி

உ.பி.யில் உள்ள ஜான்பூரில் நேற்று நள்ளிரவு பயங்கர விபத்து நடந்துள்ளது. ஜான்பூர்-அஜம்கர் நெடுஞ்சாலையில் கெர்கட் சந்திப்பில் கார் மற்றும் லாரி மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மோதியதில் கார் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் பீகாரில் ஒரே பகுதியில் வசிப்பவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via