நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு விஜய் ரூ. 1 கோடி நிதியுதவி

by Staff / 12-03-2024 12:58:00pm
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு விஜய் ரூ. 1 கோடி நிதியுதவி

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளார்.இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுவருகிறது நிதி பற்றாக்குறையால்  கட்டட பணிகள் நிறைவு பெறாமல்  உள்ளது. பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் நிலையில்  நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர்.  அண்மையில் அமைச்சர் உதயநிதி . 1 கோடி நிதி வழங்கினார்.அவரைத்தொடர்ந்து . 1 கோடிக்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.  தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் . 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

 

Tags :

Share via