ஏற்காட்டில் 45ஆவது கோடை விழா மலர் கண்காட்சி நிறைவு விழா

by Editor / 01-06-2022 09:10:02am
ஏற்காட்டில் 45ஆவது கோடை விழா மலர் கண்காட்சி நிறைவு விழா

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 26ஆம் தேதி தொடங்கியது இதனையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில்   சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில்  75 ஆயிரம் மலர்களால் ஆன மேட்டூர் அணை, 80 ஆயிரம் மலர்களால் ஆன அரசு பேருந்து, 25 ஆயிரம் மலர்களால் ஆன  பட்டாம்பூச்சி, 60 ஆயிரம் மலர்களால் ஆன வல்லுநர் கோட்டம், 5 ஆயிரம் மலர்களால் ஆன மஞ்சள் பை, 40 ஆயிரம் மலர்களால் ஆன மாட்டுவண்டி, மற்றும் 6 ஆயிரம் மலர் தொட்டிகள்  என 5 லட்சம் மலர்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர் மேலும் கோடை விழாவையொட்டி  ஏற்காட்டில்  பல்வேறு போட்டிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தியது குறிப்பாக இளைஞர்களுக்கு கைப்பந்து போட்டி, மாரத்தான் சைக்கிள் ஓட்டும் போட்டி ,பெண்களுக்கு கயிறு இழுத்தல் போட்டி, இசை நிகழ்ச்சி படகுப்போட்டி ,கிராமிய கலை நிகழ்ச்சி ,மேஜிக் ஷோ, பரதநாட்டியம், வளர்ப்பு பிராணிகள் கண்காட்சி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி வரை கடந்த 6  நாட்களில் 1.18 லட்சம் பேர் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.இறுதி நாளான இன்று கிரிக்கெட் போட்டி, இசை நிகழ்ச்சி சேர்வாட்டம் ,பரதநாட்டியத்துடன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் மாலை 6 மணிக்கு கோடை விழா மலர் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

ஏற்காட்டில் 45ஆவது கோடை விழா மலர் கண்காட்சி நிறைவு விழா
 

Tags : Yercaud 45th Summer Flower Show Closing Ceremony

Share via