விஜய் கட்சியால் திமுகவுக்குதான் பிரச்னை அமைச்சர் செல்லூர் ராஜூ

by Staff / 16-03-2024 05:10:33pm
விஜய் கட்சியால் திமுகவுக்குதான் பிரச்னை  அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை கோச்சடை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட நியாயவிலைக் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக - அதிமுக கூட்டணி வைக்கலாம் என தவெக நிர்வாகியின் கருத்து குறித்த கேள்விக்கு, "விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள். 2026 தேர்தல் வரும்போது பார்க்கலாம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு திமுகவுக்குதான். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் அவர் கட்சி ஆரம்பித்ததில் திமுகவுக்கு கோபம். அதிமுகவுக்கு இப்போ ரூட் கிளியர்" என்று பதிலளித்தார்.

 

Tags :

Share via