அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்த அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வருகை தந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த மாதம் 20 ஆம் தேதியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே, உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களை சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் நேரில் வந்து சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
Tags :