ஐநா உறுப்பு நாடாகுமா பாலத்தீனம்

by Staff / 08-04-2024 05:43:47pm
ஐநா உறுப்பு நாடாகுமா பாலத்தீனம்

பலஸ்தீனத்தை ஐநா சபையின் உறுப்பு நாடாக சேர்க்கக் கோரும் தீர்மானம் குறித்து முடிவெடுக்க ஐநா பாதுகாப்புக் கவுன்சில் இன்று கூடுகிறது. 15 உறுப்பு நாடுகளை கொண்ட ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் 9 நாடுகளின் ஆதரவு கிட்டினால் தீர்மானம் நிறைவேறி பாலஸ்தீனம் ஐநா உறுப்பு நாடாக சேர்க்கப்படும்.
இருப்பினும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதுவரை பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்காமல் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை , கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐநாவின் 'பார்வையாளர் நாடு' என்னும் நிலைக்கு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via