இன்று வெளியாகிறது:4ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு.

by Editor / 18-04-2024 08:45:57am
இன்று வெளியாகிறது:4ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு.

4ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது. 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திராவில் 25 இடங்களும், தெலுங்கானாவில் 17 இடங்களும், உத்தரப்பிரதேசத்தில் 13 இடங்களும், மகாராஷ்டிராவில் 11 இடங்களும், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் 8 இடங்களும், பீகாரில் 5 இடங்களும், ஜார்கண்ட், ஒடிசாவில் 4 இடங்களும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது முதல் இம்மாதம் 25ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும்.

 

Tags : மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு.

Share via