கலை அறிவியல் கல்லூரியில் சேர நாளை முதல் விண்ணப்பம்

by Staff / 05-05-2024 04:43:17pm
கலை அறிவியல் கல்லூரியில் சேர நாளை முதல் விண்ணப்பம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. 2024 - 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்வு செய்து விண்ணப்பங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via