ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் மரணம்.ஈரான் அதிபரை மீட்பதில் கடும் சிக்கல்.
ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக ஹெலிகாப்டரில் நேற்று அங்கு சென்றார்.அந்த நிகழ்வை முடித்துவிட்டு ஈரானுக்கு திரும்பும் போது ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.இதனை ஈரான் அரசு ஊடகம் தெரிவித்தது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈரான் அதிபரை மீட்பதில் கடும் சிக்கல்.அதிபரை இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. மீட்பு பணிக்காக சென்ற 3 பேர் இதுவரை மாயம் என தகவல்.தற்போதைய இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் மரணம்