75-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு..!!

by Admin / 13-08-2021 02:10:51pm
75-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு..!!

டெல்லி: நாட்டின் 65வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

75வது சுதந்திர தினவிழா வருகின்ற ஞாயிறு அன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற இருக்கிறார். செங்கோட்டையில் இம்முறை வித்தியாசமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக இப்பகுதியில் 20 கண்டெய்னர்கள் மூலம் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு பணியில் காவல்துறை, துணை ராணுவப்படை என சுமார் 5,000 பேர் ஈடுபட்டுள்ளனர்

. தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்கள் மூலம் டெல்லிக்கு பார்சல்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரவு, பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உரிய அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டுகள் வழங்கக்கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும் பிரௌசிங் செண்டர்களில் அடையாளம் தெரியாத நபர்களை அனுமதிக்க கூடாது என்றும் பிரௌசிங் செண்டர்களுக்கு வருவோரிடம் முகவரி சான்று பெற வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 ஜம்மு காஷ்மீரிலும் சுதந்திர தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. டிரோன்களை பறக்கவிட்டு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via