காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.160 கோடி - நிதி அமைச்சர்

by Admin / 13-08-2021 02:30:56pm
காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.160 கோடி - நிதி அமைச்சர்

தரங்கம்பாடி, திருவொற்றியூர், அழகர்குப்பம் மற்றும் ஆற்காட்டுதுறையில் மீன்பிடி துறைமுகம் திட்டப்பணிகள் விரைந்து நிறைவு செய்யப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நீண்ட கடலோர பகுதியையும், பெரிய மீனவ சமுதாயத்தையும் கொண்ட மாநிலம் ஆகும். ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மதிப்புடன் கடல் மீன் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

கடல்சார் மீனவர்களுக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்துக்காக மொத்த தொகையாக ரூ.93.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி, திருவொற்றியூர், அழகர்குப்பம் மற்றும் ஆற்காட்டுதுறையில் மீன்பிடி துறைமுகம் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை விரைந்து நிறைவு செய்யப்படும்.

புதிதாக 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க மொத்தம் ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

பழனிவேல் தியாகராஜன்

சென்னை துறைமுக பொறுப்பு கழகத்துடன் இணைந்து சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் ரூ.160 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via