நகைக்கடன் தள்ளுபடி? -அடமானம் வைத்தவர்களின் விவரங்களை கேட்கிறது அரசு

by Admin / 13-08-2021 05:35:38pm
நகைக்கடன் தள்ளுபடி? -அடமானம் வைத்தவர்களின் விவரங்களை கேட்கிறது அரசு

கூட்டுறவு வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நடைமுறையை தொடங்கியது.  கூட்டுறவு வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.

கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள்  மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வது அரசின் முன்னுரிமை என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5 சவரன் நகை அடமானம் வைத்துள்ளவர்களின் விவரங்களை கூட்டுறவு வங்கிகளிடம் அரசு கேட்டுள்ளது. வரும் 16ம் தேதிக்குள் பயனாளிகளின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்தில் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. பயனாளிகள் கேஒய்சி, ஆவணங்கள், குடும்ப அட்டை விவரங்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

 

Tags :

Share via