தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில் சட்ட மன்ற மதிப்பீட்டு குழுவினர் தமிழக முதன்மைச் செயலர் சீனிவாசன் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அடங்கிய குழுவினர் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர் முதலில் அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது கோயிலை சுற்றி உள்ள பகுதிகளிலும் கட்டுமான பணிகளும் நடைபெறுகின்றன இந்த பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டு குழு பார்வையிட்டது முன்னதாக காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் முன் பகுதியாக அமரும் பகுதியில் மாடுகள் அதிக அளவில் சுற்றி வருவதால் முன் பகுதியில் தடுப்பு அமைப்பதற்கு குழு திட்டமிட்டது இந்த ஆய்வில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஓ எஸ் மணியன் சதன் திருமலை குமார் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வில் ஈடுபட்டனர் இதனை அடுத்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்
Tags : தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு மேற்கொண்டனர்