பசுவை கடத்துவதாக நினைத்து பள்ளி மாணவன் சுட்டுக்கொலை
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தை சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா. 19 வயதான இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆகஸ்ட் 23ஆம் தேதி தனது நண்பர்களுடன் காரில் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது இவர் பசுவை கடத்துவதாக நினைத்து பசுப் பாதுகாப்பு குழுவினர் என கூறப்படும் சிலர் ஆரியன் காரை துரத்திச் சென்றுள்ளது. காரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குண்டு பாய்ந்து ஆரியன் உயிரிழந்தார். இச்சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :