திருமண விழாவில் இன்று கலந்து கொண்டுள்ளா மு க அழகிரி

by Staff / 10-09-2023 04:49:02pm
திருமண விழாவில் இன்று கலந்து கொண்டுள்ளா மு க அழகிரி

தமிழக அரசியலில் முக்கிய இடம் பிடித்த திருமங்கலம் சட்டமன்றத் தேர்தலில் தான் யார் என்று நிரூபித்து காட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கடந்த பல ஆண்டு காலமாக பொது விழாக்களிலும் பொது நிகழ்வுகளிலும் பங்கு கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் தவிர்க்கப்பட முடியாத காரணங்களால் தனக்கு மிகவும் வேண்டப்பட்ட திண்டுக்கல் பகுதியைச் சார்ந்த ஒரு நபருடைய இல்ல திருமண விழாவில் இன்று கலந்து கொண்டுள்ளார் மு க அழகிரியின் இந்த திடீர் வருகை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுக்கு முக அழகிரி வரவு புது உற்சாகத்தை அளிக்கும் என்றும் திமுக தரப்பைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர் வரும் பாராளுமன்ற தேர்தலில் முக அழகிரி முதலமைச்சர் ஸ்டாலினோடு கரம் கோர்த்து  தேர்தல் களத்தில் பணியாற்றுவார்கள் என்றும்,இணைந்து பணியாற்றி கட்டளையிட்டால் மீண்டும் திமுக மாபெரும் வெற்றியை கொடுக்கும் என திண்டுக்கல் நகரப் பகுதிகளில் திமுக அனுதாபிகள் மகிழ்ச்சியோடு பேசிக் கொள்கின்றனர்.

 

Tags :

Share via