கூடங்குளம் அருகே கொலை வழக்கில் 4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

by Editor / 05-10-2024 10:13:24pm
கூடங்குளம் அருகே கொலை வழக்கில் 4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய எல்கைக்குட்ப்பட்ட  கூத்தங்குழி புனித மிக்கேல் கோவில் அருகே கடந்த 02.09.2024 -ம் தேதி கூத்தங்குழி, பாத்திமா நகரை சேர்ந்த அஜித் (32) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் கூத்தன்குழி, பாத்திமாபுரத்தை சேர்ந்த ஜேசு அடிமை என்பவரின் மகன்கள் ரோஜன் (31), ரகுமான் (38), ஆஞ்சிலோ (36), பாத்திமா நகரை சேர்ந்த கில்பர்ட் என்பவரின் மகன் பார்த்திபன் (32) ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்ட பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் க்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிலம்பரசன்  பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர்  உத்தரவின் பேரில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைதுசெய்யப்பட்டு  பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags : கூடங்குளம் அருகே கொலை வழக்கில் 4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

Share via

More stories

Logo