இந்தியா-குவைத் இடையே மீண்டும் விமான சேவை

by Admin / 19-08-2021 02:03:23pm
இந்தியா-குவைத் இடையே மீண்டும் விமான சேவை

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து குவைத்துக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை தாக்கியதை அடுத்து உலகில் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துகளை ரத்து செய்தன.

 இதேபோல குவைத் நாடும் பயணிகள் விமானப் போக்குவரத்தை கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து குவைத்துக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. குவைத் தடை விதித்ததால் இந்த போக்குவரத்து முற்றிலும் நின்றுபோனது.

கொரோனா வைரஸ்

இந்த நிலையில் மீண்டும் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தொடங்குவதாக குவைத் அறிவித்துள்ளது. இதேபோல வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்கான போக்குவரத்தையும் நிறுத்தி இருந்தது. அதுவும் மீண்டும் தொடங்கப்படும் என்று குவைத் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளின் போக்குவரத்து ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்தது. ஜூலை 1-ந்தேதி முதல் அந்த நாடுகளுக்கு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கான போக்குவரத்தும் தொடங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via

More stories

Logo