வருமான வரித்துறை இணையதளத்தில் கோளாறு

by Editor / 22-08-2021 05:25:44pm
வருமான வரித்துறை இணையதளத்தில் கோளாறு

.வருமான வரித்துறையின் இணையதளம் மறுசீரமைக்கப்பட்டு கடந்த ஜூன் 7 ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. அந்த இணையதளத்தை இன்போசிஸ் நிறுவனம் மறுவடிவமைத்திருந்தது. இருப்பினும், அதில் பல கோளாறுகள் ஏற்பட்டன. இது குறித்து பயனாளர்கள், புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். சுயவிவரத்தில் கூடுதல் விவரங்கள் சேர்த்தல், கடவுச்சொல் மாற்றுதல் ஆகியவற்றில் சிக்கலை சந்தித்ததாகவும், இணையதளம் மெதுவாக செயல்படுவதகவும் கூறியிருந்தனர்.இது குறித்து, இன்போசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தன் நீலகேணி கவலை தெரிவித்ததுடன் கோளாறு சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

மத்திய அரசும், அனைத்தும் சரி செய்யப்படும் எனக்கூறியதுடன், இணையதளத்தை பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும், தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் வருமான வரித்துறை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: வருமான வரித்துறையின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு 2.5 மாதங்கள் ஆகியும், கோளாறுகள் இன்னும் சரி செய்யாதது ஏன்? என்பது குறித்து நாளை மத்திய நிதியமைச்சரிடம் விளக்கம் அளிக்கும்படி இன்போசிஸ் சி.இ.ஓ. ஷலீல் பரேக்கிற்கு மத்திய நிதியமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. (ஆக.,21) முதல் வருமான வரித்துறை இணையதளம் கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

 

Tags :

Share via