இனி திருப்பதி லட்டு மக்கும் பைகளில் விநியோகிக்கப்படும்

by Editor / 22-08-2021 05:22:32pm
இனி திருப்பதி லட்டு மக்கும் பைகளில் விநியோகிக்கப்படும்

திருமலை திருப்பதி கோவிலில் இனி பிரசாத லட்டுவை பேக் செய்ய சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான மக்கும் பைகள் பயன்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இதனை தயாரித்துள்ளது.DRDO தலைவர் சதீஷ் ரெட்டி , திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) செயல் அலுவலர் டாக்டர் கே. ஜவஹர் ரெட்டி மற்றும் கூடுதல் EO A.V. தர்ம ரெட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) திருமலையில் இதற்கான ஒரு பிரத்யேக விற்பனை கவுண்டரைத் திறந்து வைத்தார்.

பின்னர் லட்டு விநியோக வளாகத்தில் உள்ள புதிய கவுண்டருக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய DRDO தலைவர், ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகம், இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அபாயகரமான பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று வழிகளை கண்டுபிடித்து வருவதாக கூறினார்.

 

Tags :

Share via