தமிழக கேரளா எல்லை தென்மலை ரயில் பாதையில் மண்சரிவு

by Admin / 23-08-2021 02:16:11pm
தமிழக கேரளா எல்லை தென்மலை ரயில் பாதையில் மண்சரிவு

தமிழக கேரள எல்லையான கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது.இந்த  மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டை கொல்லம்  இடையே அமைந்துள்ள ரயில் பாதையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக தென் மலைப்பகுதியில் அமைந்துள்ள மலைக்குகைரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரும்  பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் புனலூரில் இரவு பதினொன்று முக்கால் மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டது.

 மேலும் சென்னை -கொல்லம் விரைவு ரயில்அதிகாலை 4 மணியளவில்,மற்றும் பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை  2.30 மணிக்கும் நிறுத்தி வைக்கப்பட்டது.  செங்கோட்டை ,தென்காசி ஆகிய  இரண்டு ரயில் நிலையங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

தொடர்ந்து ரயில்பாதையில் மண்சரிவை அகற்றிட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு ரயில் தண்டவாள பாதையில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மண் குவியலை தண்டவாளப்பாதையில் இருந்து  உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தண்டவாள பகுதியில் மண் சரிவை அகற்றி ரயில் இயக்கத்சீர்செய்தனர்.

7.50மணி அளவில் பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கேரளா மாநிலம்  நோக்கி புறப்பட்டு சென்றன அதேபோன்று திருநெல்வேலி வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் திருநெல்வேலிக்கு புணலுரிலிருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via