அடர் வனப்பகுதிக்குள் செல்லும் ரயில்: வைரலாகும் காட்சி  

by Admin / 31-08-2021 04:14:06pm
அடர் வனப்பகுதிக்குள் செல்லும் ரயில்: வைரலாகும் காட்சி  



மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் அடர் வனப்பகுதியின் உள்ளே ஊர்ந்து செல்லும் சுற்றுலா ரயிலுக்கு, சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது.

 புகழ் பெற்ற மலைவாசஸ்தளங்களில் ஒன்றான சிலிகுரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரயில் சஃபாரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இமயமலையின் அடிவாரத்தில் மகானந்தா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிலிகுரிக்கு ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்  'ஜங்கிள் டீ சஃபாரி'  என்னும் ரயில் சஃபாரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
மலை முகடுகள், அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், சாலை என அனைத்தையும் கடந்து ஓடுகிறது இந்த சஃபாரி ரயில். சிலிகுரி மலையின் இயற்கை அழகை இயற்கையோடு இணைந்து ரசிக்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via