3 மாத இஎம்ஐ கிடையாது- எஸ்பிஐ வங்கி

by Editor / 02-09-2021 09:49:52am
3 மாத இஎம்ஐ கிடையாது- எஸ்பிஐ வங்கி

 எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கான செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ .5 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த கடனை எளிதில் பெற முடியும். மேலும் மாதச் சம்பளம் வாங்குபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் என அனைவருமே இந்தக் கடனை பெற விண்ணப்பிக்க முடியும்.

ஏற்கெனவே எஸ் . பி . ஐ வங்கியில் தனிநபர் கடன் பெற்றிருப்பவர்களும் , இந்தக் கடனை பெறமுடியும். எஸ்பிஐயில் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கடன் வாடிக்கையாளர்கள் எந்தவித சொத்து ஆவணங்களையும் டெபாசிட் செய்ய வேண்டாம் .

தனி நபர் அல்லது அவர்களின் குடும்பத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும் . அதே நேரத்தில், குறைந்தபட்ச கடன் 25 ஆயிரம் வரை எடுக்கலாம் . இதற்கான வட்டி விகிதமாக எஸ்பிஐ 8.5% என நிர்ணியித்துள்ளது .இந்த கடனில் வாடிக்கையாளர்கள் இஎம்ஐ யை கடன் வாங்கி மூன்று மாதங்கள் கழித்து கட்டிக் கொள்ளலாம் அதுவரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via