கோல்கேட் பற்பசை மறுசுழற்சி செய்யக்கூடிய டியூபில் அறிமுகம்

by Editor / 04-09-2021 05:22:06pm
கோல்கேட் பற்பசை மறுசுழற்சி செய்யக்கூடிய டியூபில் அறிமுகம்

கோல்கேட் பற்பசை தயாரிக்கும் கோல்கேட் பாமலிவ் இந்தியா நிறுவனத்தின் பற்பசையை இந்தியாவிலேயே முதன்முறையாக மறுசுழற்சி செய்யக்கூடிய டியூபில் நிரப்பி விற்பனை செய்ய உள்ளது. சிறந்த பேக்கேஜ் நிறுவனமான இ. பி. எல். தயாரித்து கோல்கேட் நிறுவனத்திற்கு வழங்குகிறது என்று இ.பி.எல். நிறுவன தலைவர் தீபக் கஞ்சு தெரிவித்தார்.கோல்கேட் ஆக்டிவ் சால்ட் மற்றும் வேதசக்தி பற்பசை மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாட்டினா என்னும் டியூப்களில் நிரப்பி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் பிளாஸ்டிக் மறுசுழற்சி சங்கம் இதன் தரத்தை அங்கீகாரம் செய்துள்ளது. பிளாஸ்டிக்கு பதிலாக இந்த புதிய பொருள் நீடித்து உழைக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது. உறுதியானது. உள்ளே உள்ள பேஸ்ட் நீண்ட நாட்கள் கெடாமலும் பாதுகாக்கிறது. பல் மற்றும் அழகு பொருட்களை நிரப்ப இந்த பிளாட்டினா டியூப்கள் வசதியாக இருக்கும் என்று இந்த நிறுவனத் தலைவர் தீபக் கஞ்சு தெரிவித்தார். இ.பி.எல். நிறுவனம் பற்பசை டியூப் மற்றும் பேக்கிங் பொருட்கள் தயாரிப்பதில் தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via