ஹோா்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதை வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

by Admin / 16-06-2026 12:25:05pm
 ஹோா்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதை வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

அமெரிக்கா- ஈரானுக்கு இடையேயான ஒப்பந்தம் மின்னனு முறையில் கையெழுத்து இடப்பட்டதை அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்திய நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக முடங்கி கிடந்த ஹோா்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதை வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த கடல் வழிப் பாதையை கட்டணமின்றி திறப்பதற்கும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை உடனடியாக நீக்குவதற்கும் முழு அங்கீகாரம் அமெரிக்க அதிபர் அளித்துள்ளார். அதிபர் ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் ஏற்றிய சில வணிக கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் மீண்டும் நகரத் தொடங்கியுள்ளன. 500க்கும் மேற்பட்ட பெரிய வணிக கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் தேங்கிக் கிடக்கின்ற காரணத்தினால் அவற்றின் நகர்வு இன்னும் சில வாரங்கள் வரை நீடிக்கலாம் . உலகளாவிய கடல் வழி எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவிகிதம்முதல் 25 சதவிகிதம் வரை இந்த ஒற்றை பாதை வழியாகவே நடக்கிறது. இந்த நீரிணை திறப்பு அறிவிப்பால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் சர்வதேச அளவில் குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகத் தட்டுப்பாடு நீங்கி போக்குவரத்து செலவுகள் குறைவதை விட பண வீக்கமும் குறையும்.  கடல் பாதையில் வைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளைகடற்படை நவீன டோன்கள் மற்றும் மைன்ஸ் மீட்பர் மூலம் அகற்றிட குறைந்த பட்சம் 40 முதல் 50 நாள் வரை ஆகும்.

 ஹோா்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதை வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
 

Tags :

Share via

More stories

Logo