வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

by Admin / 16-08-2026 06:39:39pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும் ஓடிஸா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை நோக்கியே காற்றழுத்தம் நகர்வதாகவும் தமிழ்நாட்டின் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக ஆகஸ்ட் 18 மற்றும் 19 தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிகுடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வலுவான சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo