திருவொற்றியூரில் பிளஸ் டூ மாணவர் கொலையில் 12 மாணவர்கள் கைது.

by Admin / 16-08-2026 06:54:09pm
 திருவொற்றியூரில் பிளஸ் டூ மாணவர் கொலையில் 12  மாணவர்கள் கைது.

 சென்னை திருவொற்றியூரில் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவர் தனுஷ் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மைதானத்தில் உயிரிழந்த நிலையில்கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவர்களுக்கு இடையே நடந்த யார் சீனியர் என்கிற போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பு மாணவர்களுக்கு இடையில் வாக்குவாதத்தின் பொழுது தனுஷ் பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது. இந்நிலையில், பிளஸ் ஒன் மாணவர்கள் 12 பேர் சேர்ந்து அவரை தாக்கியதால் உயிர் இழந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர்  17 வயதிற்கு கீழ்பட்ட வயதுடைய11 மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். 18 வயதுடைய ஒரு மாணவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் ஒரு மாணவனின் உயிர் பலியில் முடிந்தது அந்தப் பகுதி பொது மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via
Logo