சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழில் அதிபர் கைது

by Admin / 30-08-2026 01:22:00am
சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழில் அதிபர் கைது

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவன்- மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்தியில் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் 6 .10. 2025 அன்று சென்னை காவல் விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அடையாளம் தெரியாத ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து ஒரு பென் டிரைவை கொடுத்தார் என்றும் அந்தப் பென்டிரைவில் பிரபல தொழில் அதிபர் வீரமணி ஒரு சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி பதிவாகி உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார் .அதன் அடிப்படையில் சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்பு பிரிவில் மறுநாள் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் பென் டிரைவில் பதியப்பட்ட வீடியோவில் இருந்த நபர் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்று தெரிய வந்தது. அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கிரானைட் தொழில் அதிபர் வீரமணி தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடாகிக்கு எடுத்து சாந்தி என்பவரும் அவரது கணவரிடமும் வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்து உள்ளதோடு அந்த வீட்டிற்கு பல்வேறு சிறுமிகளை வரவழைத்து பாலியல் கூட்டத்தில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.

வீடியோவில் பதிவான ஆதாரத்தின் அடிப்படையில் வீரமணியின் பணியாளர்களான சாந்தி ,மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிட்டது வேறு சில சிறுமைகளின் புகைப்படங்கள் மற்றும் பெண்களின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.. தொழிலதிபர் செய்த குற்றத்திற்கு உதவியாக இருந்த அவரது ஊழியர்களான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன், தொழிலதிபர் வீரமணி ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழில் அதிபர் கைது
 

Tags :

Share via
Logo