ரயில் பெட்டிகளில் பயணிகள் இரவு 10:00 மணி முதல் காலை 6.00 மணி வரை மட்டுமே தூங்க படுக்கையை பயன்படுத்த வேண்டும்
ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட படுக்க வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிகள் இரவு 10:00 மணி முதல் காலை 6.00 மணி வரை மட்டுமே தூங்க படுக்கையை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய ரயில்வேயின் விதியை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய ரயில்வேயில் கற்பனைகள் நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் படுக்கையை பயன்படுத்தி உறங்கலாம் என்றும் சிறப்பு தேவை உள்ள பயணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ரயில் பயணத்தின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது கர்ப்பிணிகளுக்கும் சக பயணிகள் கூடுதல் நேரம் தூங்க இடம் தராமல் தகராறு செய்தால் விதியை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்திற்கு வருவதற்கு பதிலாக ரயிலில் இருக்கும் டிடி ரயில்வே பாதுகாப்பு படை அல்லது ஆண் டூட்டி ரயில்வே ஊழியர்களை அணுகி புகார் அளிக்கலாம் என்றும் இந்த சலுகைகளை முறையாக அமல்படுத்த வேண்டியது ரயில்வே நிர்வாக கடமை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
Tags :



















