பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் வகுத்ததை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல்

by Admin / 04-11-2026 12:12:23am
பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் வகுத்ததை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல்

தீபாவளி அன்று குறைந்த அளவிலான புகை மற்றும் ஒலி உமிலும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும் என்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய சரவெடிகள் போன்ற தொடர்ச்சியாக வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்க முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் பள்ளிகள் நீதிமன்றங்கள் மற்றும் குடிசை பகுதிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குடியிருப்பு நல சங்கங்கள் திறந்த வெளியில் குழுவாக பட்டாசு வெடிக்க விரும்பினால் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் முன்பே அனுமதி பெற வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறைக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

Tags :

Share via
Logo