ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார் முதலமைச்சர் விஜய்.

by Admin / 04-11-2026 12:28:09am
 ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார் முதலமைச்சர் விஜய்.

தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று தமிழகத்தில் புதிதாக திரையிடப்படும் திரைப்படங்கள் ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார் முதலமைச்சர் விஜய். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த அதிகாலை காட்சிகள் மற்றும் கூடுதல் காட்சிகளுக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை ரெண்டு முப்பது மணி வரை காட்சிகளை தேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு புதிய திரைப்படங்கள் வெளியாகும் தேதியிலிருந்து முதல் ஒரு வாரத்திற்கு இந்த ஆறு காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்றும் சாதாரண நாட்களைத் தவிர உள்ளூர் பண்டிகை நாட்கள் அரசு பொதுவுடமை நாட்கள் மற்றும் வார இறுதி நாள்களிலும் தினசரி ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படத்தின் போது நள்ளிரவு சிறப்பு காட்சி போது ஏற்பட்ட ரசிகர் இறந்ததின் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இன்றைய ஆளும் திமுக அரசு அதிகாலை காட்சிகளுக்கு தடை விதித்திருந்தது. தற்பொழுது அது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மறு பரிசீலனை செய்யப்பட்டு திரை அரங்குகளில் ஆறு காட்சிகள் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo