இன்று அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறுகிறது.

by Admin / 04-11-2026 12:53:41am
இன்று அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறுகிறது.

இன்று அமெரிக்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான இடைக்கால தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் மேலவையான செனட் சபையின் 35 இடங்களுக்கும் 36 மாநிலங்களின் ஆளுநர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இத்தோ்தலில் நாடு  முழுவதும் 23 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி  பெற்றுள்ளனர். 5.7 கோடிக்கும் அதிகமான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பாகவே தபால் மற்றும் நேரடி வாக்குப்பதிவு மூலம் தங்களது வாக்குகளை முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர். தற்போதைய அமெரிக்க நாடாளு மன்றத்தின்  இரு அவைகளிலும்  ட்ரம்பின் குடியரசு கட்சி  பெரும்பான்மை வகித்து  வருகிறது . இருப்பினும், டிரம்ப அரசின் பொருளாதார நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்த மக்களின் அதிருப்தியால் ,இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தீவிரமாக முயன்று வருகிறது. இந்தத் தேர்தல் மாலை நாலு முப்பது மணிக்கு தொடங்கி நவம்பர் 4ஆம் தேதி காலை 10:30 மணி வரை நடைபெறும் அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 5:30 மணி முதல் அங்கு வாக்குப்பதிவு முடிவடையும். வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கப்படுவதால் முதற்கட்ட தேர்வு முடிவுகள் முன்னிலை நிலவரங்கள் மதியத்திற்குள் வெளியாகும் என்று தெரிகிறது.

 

Tags :

Share via
Logo