அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

by Editor / 09-09-2021 05:24:22pm
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் 13-ந் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வங்க கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்., இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via