பஞ்சாப் முதல்வர்ராஜினாமா

by Editor / 18-09-2021 07:07:25pm
பஞ்சாப் முதல்வர்ராஜினாமா

பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் , நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே சில ஆண்டுகளாகவே மோதல் இருந்து வந்தது .

அமைச்சராக இருந்த போதே நவ்ஜோத் சிங் சித்து , முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் . இதனால் இருவருக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது .

சித்து ராகுல் காந்தி டீமை சேர்ந்தவர் என்பதால் , அந்த பலத்தில் அமரீந்தர் சிங்கை எதிர்ந்து வந்தார். இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் அமரீந்தர் சிங்கின் பேச்சை மீறி சித்து கலந்து கொண்டார், இதனால் இவர்களின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து சித்து அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இந்நிலையில் தன்னை மாநிலத் தலைவராக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு சித்து நெருக்கடி தந்தார். இதனையடுத்து சித்துவரை கட்சி மேலிடம் மாநிலத் தலைவராக்கியது.

இந்த மோதல் போக்கின் உச்சமாக தற்போது முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

 

Tags :

Share via