Android பயன்படுத்துவோர் கவனம் - மால்வேர் தாக்குதல்

by Editor / 24-09-2021 05:44:08pm
 Android பயன்படுத்துவோர் கவனம் - மால்வேர் தாக்குதல்

 

ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள், புதிய வகை மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு CERT-In எச்சரித்துள்ளது.


கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு CERT-In, கூறியிருப்பதாவது:-
Drinik என்ற புதிய வகை மால்வேர், Android ஸ்மார்ட்ஃபோன்களை தாக்கி அதில் உள்ள வங்கி விவரங்கள் உள்ளிட்ட டேட்டாக்களை திருடுவதாக ஒன்றிய அரசின் CERT-In குழு எச்சரித்துள்ளது.
இது குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு, அதில் இருக்கும் லிங் மூலம் ஸ்மார்ட்ஃபோன்கள் ஹேக் செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால் Android ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via