சிஎஸ்கே  அணியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர்

by Editor / 07-10-2021 07:11:08pm
 சிஎஸ்கே  அணியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர்

 

சிஎஸ்கே அணியில்  சாம் கர்ரனுக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார். அதுமட்டுமின்றி விரைவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டியிலும் அவர் இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை.


இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சாம் கர்ரனுக்கு பதிலாக தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டோமினிக் டிரைக்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டரான இவர் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை என்ற நிலையில் ஒரே ஒரு முதல்தர போட்டியிலும் 25 முதல் நிலை போட்டிகளில் விளையாடி உள்ளார்.. 


தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்துள்ள சென்னை அணி,  பஞ்சாப் அணியை சந்திக்கிறது.  போட்டியில் டோமினிக் ட்ரைக்ஸ் கலந்து கொள்வாரா? என்பது தெரியவில்லை..சிஎஸ்கே அணியில் ஏற்கனவே பிராவோ, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகிய ஆல்ரவுண்டர்கள் இருக்கும் நிலையில் தற்போது டோம்னிக் என்ற ஆல்ரவுண்டரும் இணைந்துள்ளது அணிக்கு கூடுதல் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Tags :

Share via