இந்தியாவில் கொரோனா பாதிப்பு  14 ஆயிரமாக குறைந்தது

by Editor / 12-10-2021 04:49:40pm
 இந்தியாவில் கொரோனா பாதிப்பு  14 ஆயிரமாக குறைந்தது


இந்தியாவில் புதிதாக 14,313 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.


இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன்படி 18,166 பேருக்கும், செவ்வாய் 18,132 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் பதிவான நிலையில், 14 ஆயிரத்திற்கும்கீழ் குறைந்தது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 6,996 பேர்) இதுவரை 3 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 920 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல் தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 963 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்போர் விகிதம் 1.33 % ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 26,579 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 57 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.04 % ஆக உள்ளது.

மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2 லட்சத்து 14 ஆயிரத்து 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 95 கோடியே 89 லட்சத்து 78 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 லட்சத்து 86 ஆயிரத்து 92 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய செவ்வாய்  ஒரே நாளில் 11 லட்சத்து 81 ஆயிரத்து 766 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 58 கோடியே 50 லட்சத்து 38 ஆயிரத்து 43 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும் தற்போது 23 கோடியே 90 லட்சத்து 9,451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 21 கோடியே 62 லட்சத்து 47 ஆயிரத்து 28 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48 லட்சத்து 72 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளனர்.தொற்றுக்கு தற்போது 1 கோடியே 78 லட்சத்து 90,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 81,931 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 

Tags :

Share via