ரீபைண்ட்ஆயில் எப்படி தயாரிக்கப்படுகிறது?

by Writer / 12-10-2021 08:02:54pm
ரீபைண்ட்ஆயில் எப்படி தயாரிக்கப்படுகிறது?

நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் சமையல் எண்ணெய்களான கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், பாம் ஆயில் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்.


சமையல் எண்ணெய்களோடு  லிக்யுட் பாரஃபின் என்ற பெட்ரோலியத்தின் ‘பை ப்ரோடக்ட்’  என்னும் கழிவுப் பொருளுடன்  தேவையான வாசத்திற்கான ‘ஃப்ளேவர்’ கலந்து தயாரித்து சமையல் எண்ணெய் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது.
மூலப்பொருளை விட பல மடங்கு விலை குறைவான லிக்யூட் பாரஃபினைக் கலப்பதால் எண்ணெயின் அடக்க விலை பெருமளவில் குறைந்து விடுகிறது. வியாபார போட்டிக்காக குறைந்த விலையில் கலப்பட எண்ணெயை விற்பவர்களுக்கு மனிதர்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறை இருப்பதில்லை.


அதற்காக மேலே சொன்ன எண்ணெய்களை கலப்படத்தை அஞ்சி தவிர்த்து விட்டு ரீஃபைண்டு ஆயிலை உபயோகப்படுத்தலாமா என்றால் அதில் இன்னும் அதிக ஆபத்து இருக்கிறது.


சாதரணமாக ஒரு பொருளில் இருந்து எண்ணெய் எடுப்பதற்கு அந்தப் பொருளை காய வைத்து, அரைத்து எண்ணெய் எடுப்பார்கள். ஆனால் ரீஃபைண்டு ஆயிலைப் பொறுத்தவரையில், முதலில் எண்ணெய் வித்துக்களைப் பிரித்து, நசுக்கி, நீராவி முறையில் ( டிஸ்டிலேஷன்) 110 முதல் 180 டிகிரி வரை வெப்பத்தை உயர்த்தி எண்ணெயை பிரித்தெடுக்கிறார்கள்.


சக்கையான வித்துக்களில் இன்னமும் மிச்சமிருக்கிற எண்ணெயைப் பிழிந்தெடுக்க பெட்ரோலிய உற்பத்தியின் போது கிடைக்கும்  ஹெக்ஸேன் என்னும் திரவத்துள் சக்கையை ஊற வைத்து பின்னர் , வெப்பப்படுத்தி  நீராவி முறையில் (டிஸ்டிலேஷன்) வெவ்வேறு கொதி நிலையில்  தனித்தனியே கிடைக்கும் எண்ணெயையும், ஹெக்ஸேனையும் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள்.


இப்படிப் பிரித்துடுக்கப்பட்ட எண்ணெயை இன்னும்  சுத்தமாக்க பாஸ்பேட் எண்ணும் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.இதுவரை நடந்ததெல்லாம் பிரித்தெடுப்பு மட்டுமே. அடுத்து நடப்பதுதான்   ரீஃபைனிங், டிகம்மிங், நியூட்ரிலைசேசன்  போன்ற பிராஸஸ்கள் அடுத்தடுத்து செய்யப்படும். இறுதியில் காஸ்டிக் சோடா  அல்லது சோடா ஆஷ் மூலம் ப்ளீச்சிங் செய்யப்பட்டு பிசுபிசுப்பில்லாத, நிறமற்ற , மணமற்ற திரவமாக எண்ணெய் கிடைக்கிறது.

இதில் தேவைப்படும் நிறம் மற்றும் மணம் வேண்டி அதற்கான கெமிக்கல் வண்ணமூட்டிகளையும், ஃப்ளேவர் என்னும் மணமூட்டிகளையும் சேர்த்து பாட்டிலில், டின்னில், பாக்கெட்டுக்களில் அடைத்து கம்பெனி லேபிளோடு விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.
இதுதான் உண்மை .எனவே கவனம் தேவை.
-ஆர்.சக்தி

 

Tags :

Share via