நேபாளத்தில் 900 அடிபள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது: 32 பேர் பலி

by Editor / 13-10-2021 04:09:44pm
நேபாளத்தில் 900 அடிபள்ளத்தில்  பஸ் கவிழ்ந்தது: 32 பேர் பலி

நேபாளத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 32 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தின் லும்பினி மாகாணம் பேங்கி மாவட்டத்தில் இருந்து முகு மாவட்டத்திற்கு 45 பயணிகளுடன் முகு மாவட்டத்திற்கு நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சின் முன் டயர் திடீரென ’பஞ்சர்’ ஆனது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 32 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே 22 பேர் பலியானார்கள். அவசர சிகிச்சைக்கு போனவர்களில் 10 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்ததாக ஒரு தகவல் கூறியது. இன்னும் சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.


300 மீட்டர் அதாவது 900 அடி கிடுகிடு பள்ளத்தில் பஸ் விழுந்தது. பிரேக் பிடிக்காமல் போனதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், பலர் படுகாயமடைந்தனர்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தசாரா பண்டிக்கைக்காக சொந்த ஊர் சென்றுகொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via