ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு... முப்படை பிபின் ராவத் விளக்கம்...

by Admin / 25-10-2021 03:21:09pm
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு... முப்படை பிபின் ராவத் விளக்கம்...

 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளி மாநிலத்தவர் வெளியேறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என முப்படை தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் என அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முப்படை தலைவர் பிபின் ராவத் கலந்து கொண்டார்.
 
அப்போது பேசிய அவர், காஷ்மீரில் எப்போதெல்லாம் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவுகிறதோ, அப்போதெல்லாம் அங்கு சில பிரிவினரைக் கொன்று ஒரு பதற்றமான சூழலை நமது மேற்கு பகுதி எதிரி உருவாக்குகிறது என்றும், காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் மறைமுக போரை பாகிஸ்தான் நிகழ்த்துகிறது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பிபின் ராவத், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளி மாநிலத்தவர் வெளியேறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், அங்கு பாதுகாப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துவதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via