ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் செல்போன் எண்கள் உளவுபார்த்த விவகாரம்

by Editor / 27-10-2021 02:55:19pm
ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் செல்போன் எண்கள் உளவுபார்த்த விவகாரம்

பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் என்ற உளவு மென்பொருள், மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்கள் உளவுபார்க்கபட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்கியது.

 இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஒத்திவைத்தது. இந்தநிலையில், பெகாசஸ் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

 

Tags :

Share via