கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி

by Admin / 16-11-2021 07:36:20pm
கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி

 

கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி...

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 மழைக்காலம் என்பதால், டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியிருப்பது  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

 

Tags :

Share via