சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு....

by Editor / 21-11-2021 03:44:55pm
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு....

சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை - அண்ணாமலை இரங்கல்
புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்,மேலும்  பணி நேரத்தில் காவலர்கள் கொல்லப்படுவதற்கு விரைவில் சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.- 

பாலியல் தொல்லை - பேராசிரியர் நீக்கம்:கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் - கல்லூரி முதல்வர் கலைச்செல்வி.

சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்.

லக்னோவில் நடைபெறும் 56வது டிஜிபி/ஐஜிபி கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் மோடியுடன் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உலக மீனவர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி உள்ளிட்ட பல கடற்கரை கிராமங்களில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை; 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 29ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது.

கோவையில் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இருப்பதால் இரு தினங்களுக்கு கோவை நகரில் ட்ரோன் கேமரா பறக்க தடை -கோவை மாநகர காவல் துறை உத்தரவு.

நவ.29 ஆம் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்.
நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்து டெல்லியில் கூடிய விவசாய சங்கங்கள் முடிவு
டெல்லி எல்லை சிங்குவில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவிப்பு
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை மகா பஞ்சாயத்து நடைபெறும்.


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் செங்கல்பட்டு ரயில் மார்கத்தில் பின்னாவரம்  அருகே ரயில் தண்டவாளத்தை கடந்து மேய்ச்சலுக்கு ஒட்டி சென்ற  பானு என்பவருக்கு சொந்தமான 25 செம்மறி ஆடுகள் மின்சார  ரயில் என்ஜீன் மோதி பலி. 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த 2 தினங்களாக வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில் தற்பொழுது தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.


 

 

Tags :

Share via