ராமேஸ்வரம் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெறுகிறது கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆய்வு.

by Editor / 21-11-2021 03:23:39pm
ராமேஸ்வரம் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெறுகிறது கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆய்வு.


மதுரை கோட்டத்தில் ராமேஸ்வரம் ஒரு முக்கியமான ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்திற்கு ஆண்டுதோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள ரயில் நிலைய முகப்பு கட்டடத்தை மாற்றி அமைத்து மூன்று மாடி ரயில் நிலைய கட்டிடமாக அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். அவருடன் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா, முதுநிலை கோட்ட மேலாளர் ஆர்.பி.ரதிப்பிரியா, கோட்ட பொறியாளர் ஹிரதயேஷ் குமார், கட்டுமான பிரிவு பொறியாளர் ரதி மற்றும் இந்திய ரயில்வே நில மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்பு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் செய்யவேண்டிய பயணிகள் வசதிகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

Tags :

Share via