சின்ன சின்ன செய்திகள்

by Admin / 23-11-2021 09:31:14pm
சின்ன சின்ன செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு.
நவம்பர் 25ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த• நிலையில் டிசம்பர்10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு
பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பின் காரணமாக தேதி மாற்றம்.

அரியலூர்: கொள்ளிடம் ஆற்றில் நடுத்திட்டு பகுதியில் சிக்கிக்கொண்ட 65 மாடுகளையும் பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

“10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதால் அவர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது; தொற்று குறைந்ததும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஸ்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நிதி மய்யத் தலைவர் கமல்ஹாசனிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்.

சென்னையில்  மழை வெள்ள பாதிப்புகளை சீரமைக்க ரூ.700 கோடி நிதி வேண்டும்  மத்திய குழுவிடம் சென்னை மாநகராட்சி சார்பில் கோரிக்கை.

 

Tags :

Share via