26.11.2021-மட்டும் பள்ளி,கல்லூரி விடுமுறை விபரம்

by Editor / 25-11-2021 06:42:37pm
26.11.2021-மட்டும் பள்ளி,கல்லூரி விடுமுறை விபரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்துவரும் மழையினால் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விபரம்;

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்  மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு  மட்டும்  ஒரு நாள் மட்டும்  விடுமுறை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை.
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு தகவல்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (26.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு  உத்தரவிட்டுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (26.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (26.11.2021) விடுமுறை.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.

திருவாரூர் மாவட்டத்தில் நாளை(26.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -
மாவட்ட ஆட்சியர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்  அறிவிப்பு


 

26.11.2021-மட்டும் பள்ளி,கல்லூரி விடுமுறை விபரம்
 

Tags :

Share via