சிவசங்கர் பாபா சீக்ரெட் அறையில் சிக்கிய ஆவணங்கள்..?

by Editor / 30-11-2021 09:12:48pm
சிவசங்கர் பாபா  சீக்ரெட் அறையில் சிக்கிய ஆவணங்கள்..?

பாலியல் வழக்கில் சிறையிலுள்ள  சிவசங்கர் பாபா பள்ளியில் உள்ள ரகசிய அறையில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி உறைவிட பள்ளியின் நிறுவனருமான சிவசங்கர் பாபா. பாலியல் அத்துமீறலுக்கு ஆளான மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில், சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக விடுதியில் படித்த மாணவி கொடுத்த புகாரில், சிபிசிஐடி போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்குகள் அடுத்தடுத்து பாய்ந்தன. இதுவரை சிவசங்கர் பாபா மீது 4 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுவரை 4 பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின், கைரேகை பதிவை வைத்து, அவருடைய ரகசிய அறையை திறந்து, சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவு இருந்தால் மட்டுமே அவரது சொகுசு அறை திறக்கக்கூடிய வகையில் உருவாக்கி உள்ளதால், அவரது கைரேகையை வைத்து உறைவிட பள்ளியில் உள்ள ரகசிய அறையை இன்று திறந்து அதில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

சிபிசிஐடி தனிப்படை போலீசார் சிவசங்கர் பாபாவால் மட்டுமே திறக்கக்கூடிய அந்த அறையை அவர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்.  அவரது கைரேகை இருந்தால் மட்டுமே ஆவணங்கள் அவரது கைரேகை இருந்தால்தான் திறக்க முடியும் என்றிருந்த நிலையில், அவரது கைரேகை பதிவை வைத்து இந்த ரகசிய அறையை போலீசார் திறந்துள்ளனர்.

இந்த வழக்கில் இந்த ரகசிய அறை தான் மிக முக்கியமானதாக கருவாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மாணவிகள் இந்த ரகசிய ரூமில்தான் பாலியல் தொல்லைக்கு  உள்ளானதாக தங்கள் புகார் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் ரகசிய ரூமில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த ரூமில் மிக முக்கியமான ஆவணங்களை போலீசார் சோதனையில் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. 


 

 

Tags :

Share via