சிற்றுந்துகளின் இயக்கத்தினை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

by Admin / 30-11-2021 09:04:51pm
 சிற்றுந்துகளின் இயக்கத்தினை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சிற்றுந்துகளின் இயக்கத்தினை காணொலிக்காட்சி வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  இன்று ( 30,11,2021 ) தலைமைச்செயலகத்தில்,பொதுமக்களின் பயன்பாட்டிற்காக,சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தினை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில்,மாண்புமிகுகுறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச்செயலாளர்  முனைவர்  வெ.இறையன்பு,இ.ஆ.பமெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்/முதன்மைச்செயலாளர் தரு.பிரதீப் யாதவ்,இ.ஆ.ப.போக்குவரத்து முதன்மைச்செயலாளர்டாக்டர்கே.கோபால்,இ.ஆ.ப,மாநகர் போக்குவரத்துககழக மேலாண்மை இயக்குநர்திரு.அன்பு ஆபிரகாம் மற்றும்அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via