கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு  நோரோ வைரஸ் பாதிப்பு   

by Editor / 30-11-2021 09:20:16pm
கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு  நோரோ வைரஸ் பாதிப்பு   

கேரளாவில் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு  குறையவில்லை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த கேரளா மாநில சுகாதார துறையினர் முழு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அங்கு புதிய வகை நோரோ வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது.

மோசமான குடிநீர் மூலமே இந்த வைரஸ் பரவுவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று சுகாதார துறைஅதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தடுப்பு நடவடிக்கைகள் தீவீரமாக நடந்துவரும் நிலையில்  திருச்சூரில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுபோக்கும், தலைவலியும் இருந்து வந்துள்ளதாகவும்,அவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதார துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.இதில் பரிசோதனை முடிவில்  மாணவிகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதுபோல அந்த விடுதியில் பணியாற்றி வந்த 3 ஊழியர்களுக்கும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பாதிப்புக்கு ஆளான மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே திருச்சூரில் கல்லூரி மாணவிகள் விடுதி அமைந்துள்ள பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


 
 

 

Tags :

Share via