நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அத்துமீறும் நபர்கள்

by Admin / 11-12-2021 11:39:29am
நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அத்துமீறும் நபர்கள்

உலக பிரசித்தி பெற்ற சிவன் திருத்தலங்களில் ஒன்றான நெல்லை டவுணில் வீற்றிறுக்கும் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அவ்வாறு கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பொதுமக்களிடம் கோவிலின் நுழைவு பகுதியில் யாசக்காரர்கள் பச்சிளம் குழந்தைகளை காட்டி யாசகம் எடுக்கின்றனர் மேலும் சிறுவர் சிறுமியர் களுக்கு காசு கொடுக்காத பொதுமக்களிடம் சட்டை பையில் கை வைக்கும் அளவிற்கு செல்கின்றனர் என்றும் காசு கொடுக்காத மக்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றனர் என்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன வேதனையுடன் புலம்பி செல்கின்றனர்.கோவில் நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு யாசகக்காரர்களால் எந்தவொரு இடையூறு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கோவில் முன்பு யாசகம் எடுப்பவர்களை நிரந்தரமாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via